கணவருடன் சண்டை போட்டு பேருந்தில் வீட்டிற்கு சென்ற மனைவி.. பேருந்து ஓட்டுநரை தாக்கிய கணவர்!!
கணவருடன் சண்டை போட்டு பேருந்தில் வீட்டிற்கு சென்ற மனைவி.. பேருந்து ஓட்டுநரை தாக்கிய கணவர்!!

கணவருடன் ஏற்பட்ட தகராறால் மனைவி மினி பஸ்சில் ஏறிச் சென்றார். ஆனால் ‘நான் வராமல் என் பொண்டாட்டிய மட்டும் எப்படி ஏத்திட்டுப்போவே?’ என்று மினிபஸ் டிரைவரை தாக்கிய சம்பவம் நெல்லையில் நிகழ்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (30). இவர் தனது மனைவியுடன் சங்கரன்கோவில் அருகேயுள்ள கோயிலுக்கு சிவராத்திரியை முன்னிட்டு சாமி கும்பிட சென்றார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட கணவனுடன் கோபித்துக்கொண்டு அவரது மனைவி மட்டும் அந்த வழியாக வந்த மினிபஸ்சில் ஏறி சங்கரன்கோவில் வந்துள்ளார்.

அந்த மினிபஸ்ஸை அண்ணாத்துரை என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் வேறொரு பேருந்து மூலம் பாலமுருகன் சங்கரன்கோவில் சென்றார். வென்றிலிங்காபுரம் கிராமத்தில் அண்ணாத்துரை ஓட்டி வந்த மினிபஸ் நின்றிருந்தது. இதை கவனித்த பாலமுருகன் பஸ்சிலிருந்து இறங்கி சென்று, நான் வராம எப்படி என் பொண்டாட்டிய மட்டும் ஏத்திட்டுப்போவ? என்று கேட்டு அண்ணாத்துரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். என்ன நடக்கிறது.. அவர் என்ன பேசுகிறார்.. என மினிபஸ் டிரைவர் அண்ணாத்துரைக்கு ஒன்றும் தெரியவில்லை. அதற்கு பாலமுருகன் அண்ணாதுரையை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.
இதனையடுத்து இது தொடர்பாக அவர் அளித்த புகாரின்படி சின்னகோவிலான்குளம் போலீசார் வழக்குபதிந்து பாலமுருகனை கைது செய்தனர்.
newstm.in

