Theme Check

கிரிக்கெட் மட்டையால் தலையில் அடித்து மனைவி கொலை !!

கிரிக்கெட் மட்டையால் தலையில் அடித்து மனைவி கொலை !!

கிரிக்கெட் மட்டையால் தலையில் அடித்து மனைவி கொலை !!
X

கிரிக்கெட் மட்டையால் மனைவியை அடித்து கொலைசெய்த கணவனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சேலம் திருவாக்கவுண்டனுார் பகுதியைச் சேர்ந்த தியாகலிங்கம் மகள் தனசிரியா (26). இன்ஜினீயரான இவருக்கும் முல்லை நகரைச் சேர்ந்த கீர்த்திராஜ் (30) என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இந்த தம்பதி மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

சேலம் ரெட்டிப்பட்டியில் வாடகை வீட்டில் வசித்தனர். கோவையில் தனியார் நிறுவனத்தில் கீர்த்திராஜ் பணிபுரிந்தார். இதனிடையே, இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாத நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

murder

இதனால் பெற்றோர் வீட்டில் தனசிரியா வசித்தார். நேற்று முன்தினம் கீர்த்திராஜ் மனைவியை அழைத்துள்ளார். ஆனால் பெற்றோர் செல்ல வேண்டாம் எனக்கூறிய நிலையில் தனசிரியா கணவன் வீட்டுக்கு சென்றார். அங்கு சென்ற சிறிது நேரத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த கீர்த்திராஜ், கிரிக்கெட் மட்டையால் தனசிரியாவின் தலையில் பலமாக அடித்துள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். உடலை மின்விசிறியில் கட்டி தொங்க விட்டுள்ளார். மனைவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளார். தனசிரியா பெற்றோர் நேரில் வந்து பார்த்தபோது தனஸ்ரீ தலைப்பகுதி, உடல் முழுவதும் காயங்கள் இருந்திருக்கின்றன. அதோடு, வீடு முழுவதும் ரத்தக்கரை இருந்திருக்கின்றன. அங்கிருந்த கிரிக்கெட் மட்டையில் ரத்தம் படிந்து இருந்திருக்கிறது. அப்போதுதான் கிரிக்கெட் மட்டையால் தங்களது மகளை அடித்துக் கொலை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

murder

இதையடுத்து சூரமங்கலம் காவல் நிலையத்தில் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். சூரமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி தற்கொலை வழக்கு பதிவு செய்தனர்.பிரேத பரிசோதனையில், அடித்தும், கழுத்தை நெரித்தும் கொன்றது தெரியவந்தது.இதையடுத்து கீர்த்திராஜை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, திருமணத்திற்கு பிறகு ஆடி கார் வேண்டும் என்று கொடுமைப்படுத்தியதாகவும் இதனால் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படும் நிலையில் அதனை போலீசார் உறுதிப்படுத்தவில்லை.

newstm.in


Next Story
Share it