Theme Check

திரும்பி வராத மனைவி.. சோகத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு !!

திரும்பி வராத மனைவி.. சோகத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு !!

திரும்பி வராத மனைவி.. சோகத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு !!
X

மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த கனவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் நடந்துள்ளது.

டெல்லியின் கிழக்கு உத்தம் நகரில் திரிவேதி (41 ) என்பவர் தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில மனைவி திடீரென பிரிந்து சென்றதால் திரிவேதி வேதனை அடைந்தார். பலமுறை அழைத்தும் மனைவி குடும்பம் நடத்த திரும்பிவராததால் மனஉளைச்சல் அடைந்த திரிவேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, திரிவேதியின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீசார், இறந்தவரின் உறவினர்களிடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

court wife

இதனிடையே, அவர் வீட்டில் இருந்து நான்கு பக்க தற்கொலைக்கான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், குடும்ப தகராறு காரணமாக அவரது மனைவி, குழந்தைகளுடன் சுவிட்சர்லாந்திற்குச் சென்றதாகவும், சமூக வலைதளங்களின் மூலம் அவரைத் தடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஆனால், மனைவி திரும்பி வராததால், மனமுடைந்த அவர் மே 30 அன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பதும் தெரியவந்தது.

newstm.in

Tags:
Next Story
Share it