மனைவி மிரட்டுகிறார்.. பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கணவர் !!
மனைவி மிரட்டுகிறார்.. பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கணவர் !!

மனைவி மிரட்டுவதால் கணவனுக்குப் போலீஸ் பாதுகாப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், எனக்குத் திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், எனது மனைவியின் நண்பரும், அவரது தந்தையும் கடந்த மார்ச் மாதம் என்னை வீடு புகுந்து தாக்கினர். இது குறித்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தற்போது என் மனைவியும், அவரது நண்பரும் எனது சொத்துக்களையும், கடைகளையும் அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக என்னை கொலை செய்ய திட்டம் தீட்டிஉள்ளனர். எனவே எனக்கு போலீஸ் பாதுகாப்பு தர எஸ்.பி.க்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, மனுதாரர் மனுவின் அடிப்படையில் அவருக்குப் பாதுகாப்பு வழங்குவது குறித்து மாவட்ட எஸ்பி பரிசீலிக்க வேண்டும். மனுதாரர், எதிர்தரப்பு ஆகியோரை விசாரித்து 4 வாரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
newstm.in

