Theme Check

காணாமல் போன கணவரை ஆட்டோவில் ஊர் ஊராக தேடி அலையும் மனைவி..!!

காணாமல் போன கணவரை ஆட்டோவில் ஊர் ஊராக தேடி அலையும் மனைவி..!!

காணாமல் போன கணவரை ஆட்டோவில் ஊர் ஊராக தேடி அலையும் மனைவி..!!
X

சேலம் முத்தம்பட்டி கேட் பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன் (45). இவர் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்து வந்தார். இதில் குறைந்த வருவாயே கிடைத்தாலும் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மிகுந்த பாசத்தோடு இருந்து வந்தார்.

இதற்கிடையே இவருக்கு சிறிது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஏப்.7ந் தேதி காலை முத்தம்பட்டியிலுள்ள தனது வீட்டிலிருந்து வாழப்பாடிக்கு சென்ற சிவராமன் வீடு திரும்பவில்லை. தனது கணவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த மனைவி பழனியம்மாள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியுள்ளனர்.

தொடர்ந்து போலீசிலும் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தபட்டும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. எனவே, காணாமல் போன தனது கணவரை கண்டுபிடிக்க, பழனியம்மாள் தனியொரு பெண்ணாக ஊர் ஊராக ஆட்டோவில் சென்று தேடி அலைந்து வருகிறார்.

அதுமட்டுமின்றி ஆட்டோவில் ஒலிபெருக்கி வைத்து பிரச்சாரம் செய்தும், துண்டு பிரசுரங்களை வினியோகித்தும், விசாரித்து வருகிறார். கணவரின் புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு, ஒரு வாரத்திற்கு மேலாக சரியாக உணவு கூட உண்ணாமல், கண்ணீர் மல்க பொதுமக்களிடம் காண்பித்து அவர் தேடி வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
Share it