Theme Check

வீட்டு வாடகைக்கு கொடுத்த பணத்தில் நகை வாங்கிய மனைவி.. கொலை செய்த கணவர் !!

வீட்டு வாடகைக்கு கொடுத்த பணத்தில் நகை வாங்கிய மனைவி.. கொலை செய்த கணவர் !!

வீட்டு வாடகைக்கு கொடுத்த பணத்தில் நகை வாங்கிய மனைவி.. கொலை செய்த கணவர் !!
X

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தயானந்தா நகர் பகுதியில் ஷேக் ஃபாரூக்(40)- நசியா தம்பதி வசித்து வந்தனர். இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த ஒன்றாம் தேதி மனைவி நசியாவிடம், வீட்டு வாடகை செலுத்துவதற்காக 6,500 ரூபாய் பணத்தை கொடுதத்துள்ளார். அதன்பின்னர் அவர் வேலைக்கு சென்றுவிட்டார்.

ஆனால் நசியா அந்த பணத்தை கொண்டு கவரிங் நகைகளை வாங்கியுள்ளார். தீபாவளி வருவதால் அதனை அக்கம் பக்கத்தில் விற்பனை எது விடலாம் என கருதி அவர் அவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.

money

பின்னர் மாலையில் பணி முடிந்து வீடு திரும்பிய ஷேக், தனது மனைவியிடம் வீட்டு வாடகை செலுத்தப்பட்டதா? என கேட்டுள்ளார். அப்போது நசியா தனது கவரிங் நகை பிசினஸ் குறித்து கணவனிடம் சொல்லியுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த ஷேக், மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் மனைவியின் கழுத்தை பிடித்து, அவரது தலையை சுவற்றில் பலமாக தாக்கியுள்ளார். அதன் காரணமாக சிறுது நேரத்தில் நசியா மயக்கம் அடைந்துள்ளார். அவரை மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

money

பின்னர் நசியாவின் தாயார் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் ஷேக்கை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். வாடகை பயணத்தில் நகை வாங்கிய மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it