Theme Check

கணவரை மாற்றிய பெண்… பாதிக்கப்பட்ட கணவர் போலீஸில் விநோத மனு!!

கணவரை மாற்றிய பெண்… பாதிக்கப்பட்ட கணவர் போலீஸில் விநோத மனு!!

கணவரை மாற்றிய பெண்… பாதிக்கப்பட்ட கணவர் போலீஸில் விநோத மனு!!
X

ஏற்கனவே நடைபெற்ற திருமணத்தை மறைத்து பெண் ஒருவர் புதிதாக திருமணம் செய்து கொண்ட நிலையில், அந்தப் பெண் மீண்டும் முதல் கணவருடனே வாழச் சென்றதால் பாதிக்கப்பட்ட கணவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கோவையை அடுத்த கணுவாய் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் - நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்த யாமினி ஆகியோருக்கு கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி மூன்று மாதமே ஆகிய நிலையில், யாமினி திடீரென காணாமல் போனார்.

இது குறித்து கணவர் விக்னேஷ் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணையில், யாமினிக்கு ஏற்கனவே திருமணமான விபரம் தெரியவந்தது. இதனால் விக்னேஷ் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

cbe

யாமினிக்கு ஏற்கனவே சிவக்குமார் என்பவருடன் முதல் திருமணம் நடந்துள்ளது. ஆனால் அதனை மறைத்து அவரை விக்னேஷ் உடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். பின்னர் யாமினி மீண்டும் முதல் கணவனுடன் சென்று விட்டார்.

இது தொடர்பாக விக்னேஷ், கோவை மாநகர காவல் ஆணையருக்கு அளித்துள்ள புகார் மனுவில், ஏற்கனவே திருமணமானதை மறைத்து யாமினி மற்றும் அவரது குடும்பத்தார் 2ஆவது திருமணம் செய்து வைத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மீண்டும் முதல் கணவருடன் சென்ற யாமினி மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது பெற்றோரின் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு அவர் கொண்டுள்ளார். திருமணம் செய்து ஏமாற்றி சென்ற பெண் மீது நடவடிக்கை கோரி வந்துள்ள வினோத மனு கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

newstm.in

Next Story
Share it