Theme Check

உல்லாசத்திற்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி!

உல்லாசத்திற்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

உல்லாசத்திற்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி!
X

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ஜக்கமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவர் கூலி தொழிலாளி ராமர். இவரது மனைவிக்கும், அதே பகுதியைச் சோ்ந்த முருகன் என்பவருக்கும் நீண்ட காலமாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதை அறிந்த கணவர் மனைவியை கண்டித்துள்ளார்.
ஒருநாள் இருவரும் ஒன்றாக வீட்டில் உல்லாசமாக இருக்கும்போது ராமர் கையும் களவுமாக பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ராமரை வழிமறித்து முருகன் கடுமையாக தாக்கியுள்ளார்.

உல்லாசத்திற்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி!

இதில, படுகாயமடைந்த ராமர் சிகிச்சைப் பலனின்றி போடி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ராமரின் சகோதரர் பாலமுருகன், போடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், ராமரை கொலை செய்ததாக மனைவியின் கள்ளக்காதலன் முருகனையும், இதற்கு உடந்தையாக இருந்ததாக மனைவியையும் போலீசார் கைது செய்தனர்.

உல்லாசத்திற்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி!

இது தொடர்பாக தேனி மாவட்டக் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை முடிவுபெற்றது. இதனையடுத்து வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அப்துல் காதர், ராமரை கொலை செய்த முருகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும், ராமா் மனைவியை இந்த வழக்கிலிருந்து விடுவித்தும் தீர்ப்பளித்தார்.

newstm.in

Tags:
Next Story
Share it