Theme Check

கணவனை கொலை செய்துவிட்டு சரணடைந்த மனைவி.. காரணத்தை அறிந்து அதிர்ந்த மக்கள் !!

கணவனை கொலை செய்துவிட்டு சரணடைந்த மனைவி.. காரணத்தை அறிந்து அதிர்ந்த மக்கள் !!

கணவனை கொலை செய்துவிட்டு சரணடைந்த மனைவி.. காரணத்தை அறிந்து அதிர்ந்த மக்கள் !!
X

மனைவி மாற்று முறைக்கு ஒத்துழைக்குமாறு வற்புறுத்திய கணவனை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது சனிக்கிழமை இரவு நடந்த கொலை. பெண் ஒருவர் தனது கணவரை இரும்புக்கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு நேராக மதனயாகனஹள்ளி காவல்நிலையம் சென்று சரணடைந்தார். அங்கு தனது கணவரை கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும் அதற்கான காரணத்தை கேட்ட காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

arrested

அதாவது, தன்னை தனது உறவினர்களுடன் மனைவி மாற்று முறைக்கு கணவர் வற்புறுத்தியதாகவும், அதனால் ஆத்திரமடைந்து கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்திருக்கிறார். தொடர்ந்து நடத்திய விசாரணையில், ஹரோக்யதானஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்வாமி ராஜ். ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இவர் ஏற்கனவே தனது முதல் மனைவியை பிரிந்து பியூட்டிஷியனான நேத்ரா(35) என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்திருந்தார்.

பின்னர் நேத்ராவை மனைவி மாற்று முறைக்கு வற்புறுத்தியதால் கணவன் மனைவிக்கு இடையே சண்டை வந்துள்ளது. அதனைத்தொடர்ந்து, இரவு 10 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த தனது கணவனை அந்தப் பெண் இரும்புக்கம்பியால் அடித்து கொலை செய்ததாகவும் கூறினர். தற்போது அந்த பெண் காவல்நிலையத்தில் உள்ளதாகவும் கூறினர்.

arrested

இதுகுறித்து ஸ்வாமி ராஜின் முதல் மனைவி சத்யகுமாரி போலீசாரிடம் கூறுகையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு நேத்ராவும், ஸ்வாமி ராஜும் திருமணம் செய்துகொண்டதாகவும், இருவருக்குமிடையே அடிக்கடி சொத்துபிரச்னை நடந்துவந்ததாகவும் கூறியிருக்கிறார். இதனால் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கர்நாடகாவில் மனைவி மாற்று முறை இருக்கிறதா என்ற அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it