பிரசவத்திற்கு சென்ற மனைவி.. கேப்பில் 2வது திருமணம் செய்த போலீஸ்காரர்..!
பிரசவத்திற்கு சென்ற மனைவி.. கேப்பில் 2வது திருமணம் செய்த போலீஸ்காரர்..!

மனைவி, பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் மற்றொரு பெண்ணை இரண்டாம் திருமணம் செய்த போலீஸ்காரர் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா கொத்தான்குளத்தைச் சேர்ந்தவர் கருத்தராஜா (28). இவர், அரியலூர் போலீஸ் பட்டாலியனில் பணியாற்றி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு இவருடைய மனைவி பிரசவத்திற்காக சொந்த ஊருக்கு சென்றிருந்தார்.
அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த கபடி போட்டியில் பங்கேற்க வந்த இடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவருடன் கருத்தராஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்தப் பெண்ணை அரியலூருக்கு வரவழைத்து, அங்குள்ள போலீஸ் குடியிருப்பில் வைத்து திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், குழந்தையுடன் முதல் மனைவி அரியலூருக்கு வந்தபோது உண்மை வெளிப்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த இரண்டாம் திருமணம் செய்யப்பட்ட அப்பெண், ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். டிஎஸ்பி சபரிநாதன், இன்ஸ்பெக்டர் கீதா விசாரணை செய்து, போலீஸ்காரர் கருத்தராஜா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

