மனைவிக்கு பிறந்த நாள்... வெறிச்செயலில் ஈடுபட்ட கணவன் கைது!!
மனைவிக்கு பிறந்த நாள்... வெறிச்செயலில் ஈடுபட்ட கணவன் கைது!!

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த சதிஷ் என்பவரின் சரக்கு வாகனத்தை அதிகாலை 4 மணியளவில் 2 பேர் அடித்து உடைத்துக் கொண்டிருந்தனர். தட்டிக் கேட்டதற்கு அவர்கள் சதீஷையும், அவரது இருசக்கர வாகனத்தையும் கட்டையால் தாக்கிவிட்டுச் சென்றனர்.
தடுக்க வந்த 64 வயதான ஷரி கிருஷ்ணண் என்ற முதியவரையும் தாக்கினர். காயமடைந்த சதிஷ் சம்பவம் குறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
விசாரணையில் ரகளையில் ஈடுபட்டது அதே தெருவில் வசிக்கும் நரேந்திரன்,(29) மற்றும் அவரது கூட்டாளி மேஷாக், (19) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், நரேந்திரனின் மனைவி சண்டை காரணமாக அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். அவருக்கு பிறந்த நாள் என்பதால் சமாதானப்படுத்த நரேந்திரன் புது துணி, பரிசு பொருட்கள், கேக் உள்ளிட்டவற்றை வாங்கி வைத்தார். நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்க மதுவும் வாங்கி வைத்தார்.
ஆனால் மனைவி வராததால் குடித்து போதை தலைக்கேறிய நரேந்திரன் ஆத்திரத்தில் தனது உறவினருடன் சேர்ந்து மதுபோதையில் தகராறு செய்து அந்த தெருவில் நிறுத்தியிருந்த வாகனங்களை கட்டையால் உடைத்தது விசாரனையில் தெரியவந்தது.

இதில் மேஷாக் என்பவர் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர் என்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
newstm.in

