சசிகலா அழைத்தால் அரசியலில் இணைவீர்களா- நடிகர் சந்தானம் பரபரப்பு பதில் !!
சசிகலா அழைத்தால் அரசியலில் இணைவீர்களா- நடிகர் சந்தானம் பரபரப்பு பதில் !!

மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கொடுக்கும் எந்த கட்சியிலும் தான் இணைய தயாராக இருப்பதாக நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பாரீஸ் ஜெயராஜ் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பல்வேறு படக்குழுவினர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது நடிகர் சந்தானம் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசினார்.
அவரிடம் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் திட்டமுள்ளதா என பத்திரிக்கையாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த சந்தானம், தனக்கு ராஜ்யசபா எம்பி பதவி கொடுத்தால் எந்த கட்சியிலும் சேர தயார் என சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.
மேலும் சசிகலா அழைத்தால் அரசியலில் இணைவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கும் நகைச்சுவையாக பேசிய சந்தானம், யார் சீட்டு கொடுத்தாலும் தான் செல்ல தயார் என்று பதிலளித்தார். சந்தானத்தின் இந்த பேச்சு இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஜான்சன் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாரீஸ் ஜெயராஜ்’படத்தில் ஹீரோவாக சந்தானம் நடித்துள்ளார். வரும் பிப். 12ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது. ஏற்கனவே படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

