ஆர்யன் கான் வெளியே வருவாரா? சிறை தொடருமா? - 20ஆம் தேதி வரை திக் திக் !!
ஆர்யன் கான் வெளியே வருவாரா? சிறை தொடருமா? - 20ஆம் தேதி வரை திக் திக் !!

மும்பையில் இருந்து கோவாவிற்கு சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த கப்பலில் பயணிகள் போன்று போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சென்று, நடுகடலில் வைத்து அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஷாருக்கானின் மகன் கைது செய்யப்பட்ட விவகாரம் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மகன் கைது செய்யப்பட்டதை அறிந்ததும், ஸ்பெனில் படப்பிடிப்பில் இருந்த ஷாருக்கான் உடனடியாக இந்தியா திரும்பினார்.

இதனிடையே, கைதான ஆரியன்கானை நான்கு நாட்கள் தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதன்பிறகு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மூன்று முறை ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால் சிறையில் இருந்து வெளியில் வர முடியாமல் உள்ளார்.
இந்த நிலையில் ஆர்யன் கான் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மும்பை நீதிமன்றத்தில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியது, விற்பனை செய்த வேலைகளில் ஈடுபட்டுள்ளார் என தேசிய பொதைப்பொருள் தடுப்புப்பிரிவு சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆர்யன்கான் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், கப்பலில் சோதனை நடத்தியபோது ஆர்யன் கான் சம்பவ இடத்தில் இல்லை, போதைப்பொருள் வாங்குவதற்கான பணம் அவரிடம் இல்லை. அவரிடம் போதைப்பொருள் இல்லை எனக் குறிப்பிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்திருந்தது.
அதன்பின் ஆர்யன் கான் ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் நேற்று நடைபெற்றது. இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் 20ஆம் தேதி ஜாமீன் குறித்து முடிவு எடுக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் 20ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக்கப்படும் வரை ஆர்யன் கான் சிறையில் அடைக்கப்படுகிறார். எனினும் அப்போது ஆரியன் கானுக்கு ஜாமீன் கிடைக்குமா? அல்லது அடுத்தும் சிறை தொடருமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
newstm.in

