Theme Check

செப்டம்பர் இறுதிக்குள் நிரப்பப்படும்!! தமிழ்நாடு அரசு அதிரடி..!!

செப்டம்பர் இறுதிக்குள் நிரப்பப்படும்!! தமிழ்நாடு அரசு அதிரடி..!!

செப்டம்பர் இறுதிக்குள் நிரப்பப்படும்!! தமிழ்நாடு அரசு அதிரடி..!!
X

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்ததால் மீண்டும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த மே 8-ம்தேதி மற்றும் கடந்த ஜூன் 12-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து 31-வது சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் இடங்களில் நேற்று (ஜூலை 10) நடைபெற்றது.

MAS

தஞ்சாவூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, முனிசிபல் காலனியில் நடைபெற்று வரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டை பொறுத்தவரை முதல் தவணை தடுப்பூசி 94.68 சதவீதமும், 2ம் தவணை தடுப்பூசி 85.47 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதி 5 சதவீதம் பேர் தான் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். தமிழ்நாட்டில் தற்போது 21,513 பேர் சிகிச்சையில் உள்ளனர். தடுப்பூசி பயன்பாட்டால் உயிரிழப்பு இல்லை.

MAS

தமிழ்நாட்டில் இதுவரை 11.43 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உலகில் பல்வேறு நாடுகளில் பிஏ4, பிஏ5 என உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களில் உருமாறிய பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் அவற்றால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டில் 40 சதவீதத்திற்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலை வந்தால் மட்டுமே கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை. சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 4,308 காலிப் பணியிடங்கள் செப்டம்பர் இறுதிக்குள் நிரப்பப்படும் என்று கூறினார்.

Next Story
Share it