Theme Check

புத்தாண்டில் ‘விடியல்’ பிறக்குமா..?: எதிர்பார்ப்பில் பகுதி நேர ஆசிரியர்கள்..!

புத்தாண்டில் ‘விடியல்’ பிறக்குமா..?: எதிர்பார்ப்பில் பகுதி நேர ஆசிரியர்கள்..!

புத்தாண்டில் ‘விடியல்’ பிறக்குமா..?: எதிர்பார்ப்பில் பகுதி நேர ஆசிரியர்கள்..!
X

தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த 2012ம் ஆண்டு 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி, கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டடக்கலை மற்றும் வாழ்வியல் திறன் பாடங்களில், 5 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் பணி அமர்த்தப்பட்டு, 10 கல்வி ஆண்டுகள் கடந்துவிட்டன.

தற்போது, 12 ஆயிரத்து 483 பேர் ரூபாய் பத்தாயிரம் தொகுப்பூதியம் பெற்று வருகின்றனர். பகுதி நேரமாக அறிவிக்கப்பட்ட போதும், ஆசிரியர் காலிப்பணியிடங்கள் மற்றும் பற்றாக்குறை காரணமாக கற்பித்தல் மற்றும் அலுவலகப் பணிகளுக்கு இவ்வாசிரியர்கள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றனர்.

இருப்பினும், குறைந்தபட்ச ஊதியமே வழங்கப்படுகிறது. தொகுப்பூதியத்தில் பணியாற்றிய தொழில் கல்வி ஆசிரியர்களை நிரந்தரம் செய்ததைப் போலவே பகுதி நேர ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், “பட்ஜெட் அறிக்கையில் எதிர்பார்த்தோம். பணி நிரந்தரம் செய்வோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் பேட்டியில் கூறியுள்ளார். பணி நிரந்தரம் செய்வதற்கான அரசாணையை வெளியிட்டு, 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்க வேண்டுகிறோம்” என்றார்.

Next Story
Share it