Theme Check

திமுக இதை தெளிவு படுத்துமா..? : விஜயபாஸ்கர் கேள்வி

திமுக இதை தெளிவு படுத்துமா..? : விஜயபாஸ்கர் கேள்வி

திமுக இதை தெளிவு படுத்துமா..? : விஜயபாஸ்கர் கேள்வி
X

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் பேசியதாவது;

“அதிமுக, எதிரிக்கட்சியாக இல்லாமல் எதிர்க்கட்சியாக செயல்படும். ஆளுநர் உரையில் கொரோனா பெருந்தொற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. சீனாவில் முதன்முதலாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட காலகட்டத்திலே தமிழகத்தில் வலுவான சுகாதார கட்டமைப்பை உருவாக்கியது தமிழக அரசு.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டது. தற்போது கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவது மன நிம்மதி அளித்தாலும், அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்காக மாவட்ட மருத்துவமனைகளில் மறுவாழ்வு மையங்களை உருவாக்குதல், தொற்று அல்லாத நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குதல் உள்ளிட்ட முப்பரிமான அடிப்படையில் திட்டமிட்டு அரசு செயல்பட வேண்டும்.

கொரோனா மூன்றாவது அலை குறித்த அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள சூழலில் அதனைத் தடுக்க கூடுதலாக டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை நியமித்து, சுகாதார கட்டமைப்பை பன்மடங்கு உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தடுப்பூசி செலுத்துவதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். தமிழகத்தில், இலக்கு நிர்ணயித்தபடி 6 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

நீட் எதிர்ப்பு கொள்கையில் அதிமுக உறுதியாக இருக்கிறது. ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து என்று அறிவிப்பு வெளியிட்ட திமுக, இந்த ஆண்டு நீட் தேர்வு உள்ளதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என பேசினார்.
Tags:
Next Story
Share it