Theme Check

மத்திய அரசு ஊழியர்களுக்கு இனி பென்சன் வராதா? வெளியான பரபரப்புத் தகவல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு இனி பென்சன் வராதா? வெளியான பரபரப்புத் தகவல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு இனி பென்சன் வராதா? வெளியான பரபரப்புத் தகவல்!
X

மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்று 70 வயதை தாண்டிய பின் பென்சன் தொகையை நிறுத்த அரசு திட்டமிட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல நாளிதழ் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், இந்த நாளிதழை பார்த்து பல்வேறு ஊடகங்கள் இதே செய்தியை வெளியிட்டன.

old

இதுகுறித்து மத்திய அரசின் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) உண்மைக் கண்டறிந்து தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, 70 வயதுக்கு மேற்பட்ட பணி ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு பென்சனை நிறுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்கள் பொய்யானவை என பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பென்சன் தொகையை நிறுத்துவது தொடர்பாக மத்திய நிதியமைச்சகத்துக்கும், பென்சன் துறைக்கும் எந்தவொரு முன்மொழிதலும் வரவில்லை எனவும், இதுபோன்ற முன்மொழிதல்களை அரசு பரிசீலிக்கவில்லை எனவும் பத்திரிகை தகவல் அலுவலகம் தெளிவாக உறுதிபடுத்தியுள்ளது.

இதனையடுத்து இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில் இது குறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம், தங்கள் ட்விட்டர் பக்கத்திலும் அறிவித்துள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it