Theme Check

மீண்டும் ஊரடங்கா..? ஒன்றிய சுகாதார அமைச்சர் ஆலோசனை..!!

மீண்டும் ஊரடங்கா..? ஒன்றிய சுகாதார அமைச்சர் ஆலோசனை..!!

மீண்டும் ஊரடங்கா..? ஒன்றிய சுகாதார அமைச்சர் ஆலோசனை..!!
X

இந்தியாவில், கடந்த ஜனவரி மாத இறுதியில், கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலையின் தாக்கம் குறைந்து வந்தது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. கொரோனா 3-வது அலைக்கு ஒமைக்ரான் தொற்று முக்கிய காரணமாக அமைந்தது. ஒமைக்ரான் தொற்று அதிவேகமாகப் பரவினாலும் கூட, அதிகளவில் உயிரிழப்பை ஏற்படுத்தவில்லை.

இந்தியாவில் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்ததை அடுத்து, கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதியுடன் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது. மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தி இருந்தது. இதற்கிடையே, ஐரோப்பிய நாடான பிரிட்டனில், ஒமைக்ரான் வகை தொற்றின் திரிபான எக்ஸ்.ஈ. வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வகை தொற்று ஒமைக்ரானை விட அதி வேகமாகப் பரவக் கூடியது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் டெல்லியில் நேற்று சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொண்டார்.

மாறுபட்ட எக்ஸ்.ஈ. வகை கொரோனா நிலவரம் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார். கொரோனா பாதித்தவர்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வது மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது செயல்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசி திட்டத்தை முழு வேகத்தில் மேற்கொள்வது மற்றும் தகுதியுள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்தும் அதிகாரிகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் வலியுறுத்தினார்.

Next Story
Share it