Theme Check

டெல்டா கொரோனாவை விட ஒமைக்ரான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமா? - WHO சூப்பர் தகவல் !

டெல்டா கொரோனாவை விட ஒமைக்ரான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமா? - WHO சூப்பர் தகவல் !

டெல்டா கொரோனாவை விட ஒமைக்ரான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமா? - WHO சூப்பர் தகவல் !
X

ஒமைக்ரான் திரிபு கொரோனா, டெல்டா வகையைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கான ஆதாரமில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

‘ஒமைக்ரான்’ எனும் புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. முதன் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் பரவல் குறித்து பல நாடுகளும் அச்சத்திலேயே உள்ளது

corona treatment

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு ஒமைக்ரான் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. கடுமையான நோயை ஏற்படுத்தாது என்று கூறியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் அவசர கால இயக்குனர் மைக்கேல் ரியான் இதுகுறித்து கூறுகையில், முந்தைய கொரோனா வகைகளை விட ஓமைக்ரான் கடுமையான நோயை ஏற்படுத்துகிறது என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. நம்மிடம் மிகவும் பயனுள்ள தடுப்பூசிகள் உள்ளன. அவை தற்போதுள்ள அனைத்து வகைகளுக்கும் எதிராக செயல்பட்டு நோயின் தீவிரத்தை கட்டுபடுத்தியுள்ளது. அதேநேரத்தில் ஒமைக்ரான் குறித்து மேலும் ஆரய்ச்சி தேவை.

வைரஸ் உருமாறியிருக்கும் நிலையில், நாம் ஏற்கெனவே கடைபிடித்து வரும் தனிமனித இடைவெளி, முகக்கவசம் போன்ற பாதுகாப்பு அம்சங்களை தொடர்வது அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
corona treatment


ஒமைக்ரான் வகை கொரோனா டெல்டாவை விட வீரியமிக்கது என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை என்பதை அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஃபாசியும் உறுதிசெய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு ப்ளாஸ்மா சிகிச்சை தேவையில்லை எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

newstm.in

Next Story
Share it