Theme Check

ராகுல் திராவிட் இப்படியும் பயிற்சி அளிப்பாரா? தீயாய் பரவும் வீடியோ

ராகுல் திராவிட் இப்படியும் பயிற்சி அளிப்பாரா? தீயாய் பரவும் வீடியோ

ராகுல் திராவிட் இப்படியும் பயிற்சி அளிப்பாரா? தீயாய் பரவும் வீடியோ
X

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் இன்று தொடங்குகிறது. இருபது ஓவர் தாெடரை வென்ற உற்சாகத்தில் இந்திய அணி களமிறங்குகிறது.

கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் இன்று முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்ளும் நிலையில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் வீரர்களுக்கு பந்துவீசியுள்ளார். அவர் ஆஃப் ஸ்பின் வீசி அசத்திய வீடியோ வலம் வந்து கொண்டிருக்கிறது.
india test
இந்திய அணிக்கு ஆடிய போது அவ்வளவாக பவுலிங் வீசாத ராகுல் திராவிட் நேற்று வலையில் ஆஃப் ஸ்பின் வீசினார். இந்திய கிரிக்கெட் டீம் சோஷியல் மீடியா ராகுல் திராவிட் பந்து வீசிய வீடியோவை வெளியிட்டுள்ளது. விலைமதிப்பற்றதாகப் பார்க்கப்படும் இந்தத் தருணம் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை மட்டுமே ராகுல் திராவிட் எடுத்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் போட்டி ஒன்றில் பாகிஸ்தானின் ஓபனர் சயீத் அன்வர் விக்கெட்டை ராகுல் திராவிட் எடுத்து அனைவரையும் வியக்க வைத்தார். ராகுல் டிராவிட் பந்து வீசிய வீடியாே வைரலாகி வருகிறது. இன்று நடைபெறும் முதல் போட்டியில் இந்திய அணியில் ஷ்ரேயஸ் அய்யர் அறிமுக டெஸ்ட்டில் களம் காண்கிறார். இதனை கேப்டன் ரகானே உறுதி செய்துள்ளார்

newstm.in

Tags:
Next Story
Share it