ரஜினி சொன்ன வார்த்தையை காப்பாற்றுவாரா? ஏக்கத்துடன் காத்திருக்கும் சொந்த ஊர் மக்கள்!
ரஜினி சொன்ன வார்த்தையை காப்பாற்றுவாரா? ஏக்கத்துடன் காத்திருக்கும் சொந்த ஊர் மக்கள்!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரின் சொந்த ஊர், மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள மாவடி கதேபதார் கிராமம். அந்த கிராமத்தில் ரஜினியின் குடும்ப பெயரான ‘கெய்க்வாட்’ என்ற பெயரில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றன.
அந்த குடும்பங்களின் சார்பில் குறிப்பிட்ட கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி ரஜினியின் தாத்தா இந்த ஊரில் இருந்துதான் கர்நாடகத்துக்கு சென்றவர்.அவருடைய குடும்ப நிலம் இன்னும் இங்கு உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, புனே அருகே லோனோவாலாவில் அவர் ஒரு படப்பிடிப்புக்காக வந்திருந்தபோது அவரை நாங்கள் சந்தித்து ஹிந்தியில் பேசியபோது, மராத்தியில் பேசுமாறு அறிவுறுத்தினார். அந்த சமயத்தில் சொந்த கிராமமான மாவடி கதேபதாருக்கு ஒருநாள் வருவதாக உறுதி அளித்துள்ளார். அவர் சொன்னதை செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களுடைய குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு விருது கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி. இதை கொண்டாடவும், அவரின் வருகைக்காகவும் இந்த கிராமமே காத்துக் கொண்டிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்

