ரஜினிக்கு உடல்நிலை பாதிப்பா..?: பரவிய தகவலுக்கு விளக்கம்..!
ரஜினிக்கு உடல்நிலை பாதிப்பா..?: பரவிய தகவலுக்கு விளக்கம்..!

நடிகர் ரஜினிகாந்த், உடல்நிலை பாதிப்பு காரணமாக சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் வெளியான ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.
இந்த படத்திற்காக ரஜினியே கதை எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை எழுதவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
தற்போது இப்படத்தின் முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
ரஜினியின் உடல்நிலையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக அமெரிக்கா சென்று சிகிச்சை பெறப்போவதாக தகவல் ஒன்று சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வந்தது.
‘தலைவர் 169’ படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட்டில் தொடங்கவிருப்பதால் அதற்கு முன்னரே அமெரிக்கா சென்று வர திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது.
ஆனால், இந்த தகவல்களில் எதுவுமே உண்மையில்லை என்று ரஜினி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

