கொரோனா 2-வது அலை போல 3-வது அலை தீவரமாக இருக்குமா ? - புதிய ஆய்வில் தகவல் !!
கொரோனா 2-வது அலை போல 3-வது அலை தீவரமாக இருக்குமா ? - புதிய ஆய்வில் தகவல் !!

இந்தியாவில் கடந்த ஆண்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் முதல் அலையை விட 2-வது அலையில் கடும் விளைவுகள் ஏற்பட்டன. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு பூஞ்சை நோய் பாதிப்புகளும் ஏற்பட தொடங்கின. நாடு அதிக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளையும் சந்தித்தது.
இந்நிலையில், டெல்டா வகை கொரோனா 2-வது அலையில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் டெல்டா ப்ளஸ் என்ற உருமாறிய கொரோனா வகை பரவியுள்ளது.இந்நிலையில், கொரோனா 2-வது அலையைப் போல் 3-வது அலை அத்தனை தீவிரமாக இருக்காது என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொரோனா 2-வது அலை உச்சத்தில் இருக்கும் போதே மூன்றே மாதங்களில் இந்தியாவின் 40 சதவீத மக்கள் தொகையினர் தடுப்பூசிப் போட்டுக் கொண்டுள்ளனர். இதன் அடிப்படையில் 3-வது அலை அத்தனை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தாது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில், தொற்று நோய்த்துறை நிபுணர்கள், லண்டன் இம்பிரியல் கல்லூரியின் பொது சுகாதாரத்துறை பயிலகத்தின் நிபுணர்கள் உள்ளிட்டோர் மேற்கொண்ட இந்த ஆய்வின் விவரங்கள் இந்திய மருத்துவ ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

