Theme Check

சீன ஆப்பிள்களுக்கு மட்டும் இறக்குமதி வரி குறைப்பா?- மத்திய அரசு அதிரடி விளக்கம் !!

சீன ஆப்பிள்களுக்கு மட்டும் இறக்குமதி வரி குறைப்பா?- மத்திய அரசு அதிரடி விளக்கம் !!

சீன ஆப்பிள்களுக்கு மட்டும் இறக்குமதி வரி குறைப்பா?- மத்திய அரசு அதிரடி விளக்கம் !!
X

விலை குறைவான சீன ஆப்பிள்கள் இந்தியாவுக்கு அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன என்ற தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு மத்திய வா்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களுக்கு மத்திய அரசு வரியைக் குறைத்துள்ளதாக சிலா் வதந்திகளைப் பரப்புகின்றனா். இந்த தகவல் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாதது.

இதுபோன்ற எந்த வரிக் குறைப்பு நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை. உலக வா்த்தக அமைப்பின் (டபிள்யூடிஓ) விதிகளின்படிதான் அனைத்து இறக்குமதி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்றாா்.

china apples

சீனாவில் தொடா்ந்து ஏற்படும் மின்தடையால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள விவகாரம் இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்க உதவுமா என்ற கேள்விக்கு, ‘நமது உள்நாட்டு நிறுவனங்களுக்கு இப்போது அதிக வாய்ப்புகள் உள்ளன.

china apples

தொழில்முனைவோா் மிகுந்த நாடாக இந்தியா மாறி வருகிறது. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் நமது நாட்டில் அதிகம் உள்ளன. நாட்டின் ஏற்றுமதி தொடா்ந்து அதிகரித்து வருகிறது’ என்றாா். மேலும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க மதிய உணவு வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரதான் மந்திரி போஷன் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் 11 லட்சம் பள்ளி செல்லும் மாணவர்கள் பயன் பெறுவர்.

newstm.in

Tags:
Next Story
Share it