ஏப்ரல் இறுதிக்குள் 50,000 உயிரிழப்புகள் ஏற்படுமா? உலக சுகாதார அமைப்பு விளக்கம்!
ஏப்ரல் இறுதிக்குள் 50,000 உயிரிழப்புகள் ஏற்படுமா? உலக சுகாதார அமைப்பு விளக்கம்!

இந்தியாவில் கொரோனாபரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இருந்த போதிலும் சில வாரங்களாக கொரோனா அசுர வேகம் எடுத்து தீவிரமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக நேற்று ஒரே நாளில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.03 லட்சம்பேர் என்ற அதிர்ச்சி தரும் தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதுடன் தடுப்பூசி போடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தற்போது 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், 18வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை போட அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறையும், இந்திய மருத்துவ கவுன்சிலும் கோரிக்க விடுத்துள்ளன. மேலும் பாதிப்பு அதிகம் உள்ள மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்கள் இரவு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.
இந்நிலையில் ஏப்ரல் 15க்குள் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கள் அதிகரித்து 50 ஆயிரம் உயிரிழப்புகள் வரை ஏற்படலாம் என உலக சுகாதார நிறுவனம் கூறியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம் அந்த வீடியோ போலியானது எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

