அமைச்சரவையில் மாற்றமா.. 6 பேர் விடுதலையா..?: கவர்னரை சந்திக்கிறார் முதல்வர்..!
அமைச்சரவையில் மாற்றமா.. 6 பேர் விடுதலையா..?: கவர்னரை சந்திக்கிறார் முதல்வர்..!

தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும் என கூறப்பட்டு வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது, தமிழக அமைச்சரவையின் பட்டியலை கொடுக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்த தினமான ஜூன் 3-ம் தேதி பதவியேற்பு விழா நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இன்றைய ஆளுநர் உடனான சந்திப்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 6 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரோடு ஆலோசிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மீதமுள்ள 6 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளது. அதன் அடிப்படையில் தமிழக ஆளுநரோடு இந்த சந்திப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

