மகாராஷ்டிராவில் மீண்டும் முழு ஊரடங்கா?.. முதல்வர் உத்தவ் தாக்கரே இரவில் உரை !
மகாராஷ்டிராவில் மீண்டும் முழு ஊரடங்கா?.. முதல்வர் உத்தவ் தாக்கரே இரவில் உரை !

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் சில வாரங்களாக குறிப்பிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 1.21 கோடி பேர். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1.62 லட்சம் பேர். பரவல் அதிகரித்து வருவதை அடுத்து பல நகரங்களில் மாநில அரசுகள் ஊரடங்கு பிறப்பித்து வருகிறது.

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 10 மாவட்டங்களில் 8 மகாராஷ்டிராவில் உள்ளன. இந்த நிலையில் இன்று இரவு முததல் அங்கு கடந்த ஆண்டை போன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறதா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து அதிகாரிகளுடன் அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அவரச ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், இன்று இரவு 8.30 மணிக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே மாநில மக்களுக்கு உரையாற்ற உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படாலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
newstm.in

