Theme Check

விஜயகாந்த் மீண்டும் திரைப்படத்தில் நடிக்கிறாரா? அவரது மனைவியே வெளியிட்ட அப்டேட் !

விஜயகாந்த் மீண்டும் திரைப்படத்தில் நடிக்கிறாரா? அவரது மனைவியே வெளியிட்ட அப்டேட் !

விஜயகாந்த் மீண்டும் திரைப்படத்தில் நடிக்கிறாரா? அவரது மனைவியே வெளியிட்ட அப்டேட் !
X

1980-ல் ‘தூரத்து இடிமுழக்கம்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்தார் விஜயகாந்த். கேப்டன் பிரபாகரன், சட்டம் ஒரு இருட்டறை, ஊமை விழிகள், புலன் விசாரணை, சேதுபதி ஐ.பி.எஸ் உள்ளிட்ட பல படங்கள் திருப்புமுனை படங்களாக அமைந்தன. கடைசியாக அவரது நடிப்பில் ‘எங்கள் ஆசான்' படம் வெளியானது.

அதன்பிறகு தீவிர அசியலில் கவனம் செலுத்தியதால் சினிமாவை விட்டு ஒதுங்கினார். தனது மகன் சண்முக பாண்டியன் நடித்த ‘சகாப்தம்’ படத்தில் மட்டும் சிறப்பு தோற்றத்தில் வந்து போனார். பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலல் ஓய்வெடுக்கத் தொடங்கினார். தற்போது உடல் நலம் தேறி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

vijayakanth

இந்த நிலையில் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜயகாந்தை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கிறது என தகவல் வெளியானது. இதனால் அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

ஆனால், நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் திரைப்படம் ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து அந்த செய்தி தவறானது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

vijayakanth

தங்களை தாங்களே பத்திரிக்கையாளர் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு யூடியுப் வீடியோக்களில் தவறான செய்திகளை பரப்பி வரும் ஒரு சிலர் விஜயகாந்த் விரைவில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் என்றும் வதந்தியை கிளப்பினர். இந்த வதந்தி காட்டுத் தீ போல பல ஊடகங்களில் வெளிவந்த நிலையில் தற்போது இது குறித்து பிரேமலதா விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it