வாக்காளர்களுக்கு இணையதளம் மூலம் பணப்பட்டுவாடா?- தேர்தல் ஆணையம் பதில் !!

வாக்காளர்களுக்கு இணையதளம் மூலம் பணப்பட்டுவாடா?- தேர்தல் ஆணையம் பதில் !!

வாக்காளர்களுக்கு இணையதளம் மூலம் பணப்பட்டுவாடா?- தேர்தல் ஆணையம் பதில் !!
X

தமிழக தேர்தலில் ஆளும் கட்சியினர் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு வருவதாகவும் தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினர் அதற்கு உடந்தையாக இருப்பதாகவும் புகார் கூறப்படுகிறது. அந்த வகையில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் போட்டியிடும் கரூர் தொகுதியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இந்த நிலையில், தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாக்காளர்களுக்காக பணத்தை இணையதளம் மூலமாக கொடுக்க முயற்சிக்கிறார். இதை தடுக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மற்றும் தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில், ஆர்.எஸ்.பாரதி மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- வங்கிக் கணக்குகளிலிருந்து சட்டவிரோதமான மற்றும் சந்தேகத்திற்குரிய பண பரிமாற்றங்கள் குறித்து அனைத்து வங்கிகளுக்கும் தெளிவாக விளக்கப்பட்டது.

சட்டவிரோதமான மற்றும் சந்தேகத்திற்குரிய பணபரிமாற்ற பரிவர்த்தனைகள் ஏதேனும் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளின் பெயர், யாருக்கு தொகை வினியோகிக்கப்பட்டது, எந்தக் கணக்கிலிருந்து தொகை மாற்றப்பட்டது போன்ற விவரங்கள் ஏதேனும் தெரிவித்தால், தேர்தல் கமிஷனால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தொண்டமுத்தூர் தொகுதியில் மட்டுமல்லாமல், கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் இதுபோன்ற சந்தேகத்திற்குரிய பண பரிமாற்றம் பரிவர்த்தனைகளை சரிபார்க்க முறையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அத்துடன், தமிழக அமைச்சர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாக தடுக்க அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தகுந்த நடவடிக்கைளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது, என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


newstm.in


Tags:
Next Story
Share it