வாடி வதங்கும் மக்கள்.. நேற்று 8 நகரங்களில் வெயில் சதம் !!
வாடி வதங்கும் மக்கள்.. நேற்று 8 நகரங்களில் வெயில் சதம் !!

தமிழகத்தில் நேற்று (வியாழக்கிழமை) 8 நகரங்களில் வெப்பநிலை 100 பாரன்ஹீட் டிகிரியை தாண்டியது.
மாா்ச் முதல் மே வரை மூன்று மாதங்கள் கோடைகாலம் ஆகும். இதில் ஏப்ரலில் தான் வெப்பநிலை அதிகரிக்க தொடங்கும். ஆனால் இந்தாண்டு மாா்ச் மாதம் முதல் வாரத்திலேயே வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது, மேலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தில் நேற்று (மார்ச் 17) 8 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரியை (பாரன்ஹீட்) தாண்டியது.

அதிகபட்சமாக ஈரோட்டில் 103 பாரன்ஹீட் டிகிரி பதிவானது. மேலும் மதுரை விமானநிலையம், சேலத்தில் தலா 102 டிகிரியும், நாமக்கல், திருச்சிராப்பள்ளியில் தலா 101 டிகிரியும், கோயம்புத்தூா், தருமபுரி, வேலூரில் தலா 100 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்றாா். இதனால் வரும் நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in

