Theme Check

ஒரே நேரத்தில் ஒரு பாக்கெட் சிகரெட் குடித்த சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!!

ஒரே நேரத்தில் ஒரு பாக்கெட் சிகரெட் குடித்த சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!!

ஒரே நேரத்தில் ஒரு பாக்கெட் சிகரெட் குடித்த சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!!
X

ஒரே நேரத்தில் ஒரு பாக்கெட் சிகரெட்டை புகைத்து தள்ளிய சிறுவன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்த 15 வயது சிறுவனை மூச்சு விடுவதற்கே சிரமமான நிலையில் அவனது பெற்றோர் மருத்துவமனைக்கு தூக்கி வந்தனர். அதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் அளித்த முதல்கட்ட சிகிச்சையில் சிறுவனின் உடல்நிலை ஓரளவு தேறியது.

மூச்சுத் திணறலுக்கான காரணத்தை மருத்துவர்கள் கேட்ட போது, தனது பெற்றோரிடம் சொல்லிவிட வேண்டாம் என ருத்துவர்களிடம் நடந்ததை கூறியுள்ளான சிறுவன். அந்த சிறுவன் கேஜிஎஃப் 2 திரைப்படத்தை கடந்த வாரம் பார்த்துள்ளான்.

kgf 1

படத்தில் கதாநாயகனாக வரும் ராக்கி பாய் மீது அவனுக்கு பெரிய அளவில் ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்தப் படத்தில் ராக்கி பாயாக நடித்த யஷ், தொடர்ச்சியாக சிகரெட் புகைக்கும் பழக்கம் கொண்டவராக காட்டப்பட்டிருப்பார்.

எனவே, தானும் சிகரெட் பிடித்தால்தான் ராக்கி பாயை போல கெத்தாக இருக்க முடியும் என நினைத்த சிறுவன், ஒரே நேரத்தில் ஒரு பாக்கெட் சிகரெட்டை புகைத்துள்ளான்.

boy

முதன்முறையாக இத்தனை சிகரெட்டுகளை பிடித்ததால் அவனது உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் நடு இரவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, உயிருக்கு அபத்தான நிலையில் அவனை அவனது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

தற்போது சிறுவன் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், தொடர்ந்து சிகிச்சையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

newstm.in

Next Story
Share it