Theme Check

வயல்வெளியில் சிறுமியை கற்பழித்து கொன்ற கொடூரன் கைது!!

வயலுக்கு சென்ற சிறுமியை சிரழித்து கொலை செய்த ரவுடி.. ஆத்திரமடைந்த பெற்றோர்..

வயல்வெளியில் சிறுமியை கற்பழித்து கொன்ற கொடூரன் கைது!!
X

உத்தரபிரதேசத்தின் பராபங்கி மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொலை செய்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குடும்பத்துடன் வசித்து வந்த சிறுமி தங்களுக்கு சொந்தமான வயலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அடல் என்ற ரவுடி சிறுமியை கடத்தி சென்றார். பின்னர் விவசாய நிலத்தில் வைத்தே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வயல்வெளியில் சிறுமியை கற்பழித்து கொன்ற கொடூரன் கைது!!

பின்னர் அடலை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததை அடல் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, குற்றவாளி அடல்லை சிறைக்கு அனுப்பினர். விசாரணையில் அடல் அப்பகுதியில் மக்களை மிரட்டுவதும், வணிகர்களிடம் மாமூல் பெற்று வந்ததும் தெரியவந்தது. அவர் மீது மேலும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

newstm.in

Tags:
Next Story
Share it