சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரனுக்கு 30 ஆண்டுகள் சிறை..! அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி..
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரனுக்கு 30 ஆண்டுகள் சிறை..! அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி..

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பூக்காரத் தெருவைச் சேர்ந்தவர் மதுரை வீரன். அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியைக் கடந்த 2018ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. அச்சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மதுரை வீரனை, போக்சோ சட்டத்தில் கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கு தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணை நிறைவடைந்து, நீதிபதி கீதா தீர்ப்பு அளித்தார். இதில் ஆதாரங்களுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராத தொகையாக 20 ஆயிரம் ரூபாயும் செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு இழப்பீட்டுத் தொகையாக 7 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி ஆணையிட்டார்.
newstm.in


