Theme Check

பெண் போலீசாருக்கு ரோஜா பூ வழங்கி கமிஷனர் வாழ்த்து! மகளிர் தின கொண்டாட்டம்!!

மகளிர் தின கொண்டாட்டம்!! பெண் போலீசாருக்கு ரோஜா பூ வழங்கி கமிஷனர் வாழ்த்து..!

பெண் போலீசாருக்கு ரோஜா பூ வழங்கி கமிஷனர் வாழ்த்து! மகளிர் தின கொண்டாட்டம்!!
X

பெண்களை போற்றும் விதமாக சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவது கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி ஆனது நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மகளிர் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மகளிர் காவல்துறை அதிகரிகளுக்கு ரோஜா பூ வழங்கி தனது மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.
பெண் போலீசாருக்கு ரோஜா பூ வழங்கி கமிஷனர் வாழ்த்து! மகளிர் தின கொண்டாட்டம்!!

மேலும் இந்நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் ஆர்.தினகரன், பிரேம் ஆனந்த் சின்ஹா, ஈஸ்வரமூர்த்தி, இணை கமிஷனர்கள் மகேஷ்வரி, விஜயகுமாரி, ஏ.ஜி.பாபு, எழில் அரசன், ஜெயகவுரி ஆகிய காவல்துறையின் உயர் அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இதே போல் சென்னை பரங்கிமலை ஆயுதப்படை மைதானத்திலும் மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதிலும் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் உடன் 800 பெண் போலீசார் கலந்து கொண்டு கொண்டாடினர்.

newstm.in

Tags:
Next Story
Share it