வேலைக்கு ஆப்பு வைத்துக்கொண்ட பெண் போலீஸ்... துப்பாக்கியுடன் டிக் டாக் வீடியோ..
வேலைக்கு ஆப்பு வைத்துக்கொண்ட பெண் போலீஸ்... துப்பாக்கியுடன் டிக் டாக் வீடியோ..

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் எம்.எம். போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் போலீஸ் பிரியங்கா மிஸ்ரா. இவர் துப்பாக்கியுடன் எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகியது. அதுவே அவருக்கு சிக்கலை கொடுத்து உள்ளது.
இதனையடுத்து மேலதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்தப் பெண் போலீசை இடைநீக்கம் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைத்தனர். போலீசாரிடம் துப்பாக்கி இருப்பது உயிர்களைக் காக்கவும் தற்காப்புக்காகவும் மட்டும்தான் என்பதை போலீசார் மறந்துவிடக்கூடாது என்று உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
UP woman constable attached to police lines for shooting a video flaunting revolver in uniform. #Agra @agrapolice @Uppolice pic.twitter.com/JJ9mmPfXci
— Anuja Jaiswal (@AnujaJaiswalTOI) August 25, 2021
Tags:
Next Story

