Theme Check

முன்னாள் காதலனுடன் பழகியதாக பெண்ணுக்கு ஆட்சி வீச்சு!!

முன்னாள் காதலனுடன் பழகியதாக பெண்ணுக்கு ஆட்சி வீச்சு!!

முன்னாள் காதலனுடன் பழகியதாக பெண்ணுக்கு ஆட்சி வீச்சு!!
X

சென்னை மதுரவாயலை சேர்ந்த லேகா (30) என்பவர் தன் தாயுடன் வீட்டில் இருந்தார். அப்போது வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டு லேகா கதவை திறந்தார். அப்போது வெளியே ஆணுடன் நின்ற கொண்டிருந்த பெண் ஒருவர், கையில் இருந்த ஆசிட்டை லேகா மீது ஊற்றினார்.

அதில் லேகாவுக்கும், அருகில் நின்றிருந்த அவரது தாயாருக்கும் முகம் வெந்து போனது. வலியால் துடித்த தாய்-மகள் இருவரும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லேகா மீது திராவகம் வீசிய போரூர் மங்களா நகரை சேர்ந்த ஐஸ்வர்யா (37), தீனதயாளன் (36) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்தனர்.

maduravyol-acid

அதில் லேகா, பார்த்திபன் என்பவரை காதலித்து வந்தார். பின்னர் அவரை கைவிட்டுவிட்டு தீனதயாளனை காதலித்தார். தற்போது அவருடனான தொடர்பையும் நிறுத்தி விட்டார். இந்நிலையில் லேகாவின் முன்னாள் காதலன் பார்த்திபனை, ஐஸ்வர்யா காதலித்து வருகிறார்.

லேகாவின் பிரிவை தாங்க முடியாத முன்னாள் காதலன் தீனதயாளன், அவரை பழிவாங்க திட்டமிட்டு, ஐஸ்வர்யாவுடன் பழகினார். அப்போது, லேகா இன்னும் பார்த்திபனுடன் பழகுவதாக கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஐஸ்வர்யா, தீனதயாளனை அழைத்துக்கொண்டு லேகா வீட்டுக்கு சென்று ஆசிட் வீசியது தெரிந்தது. கைதான 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it