பாதுகாப்பு பணிக்குசென்ற பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை.. தாசில்தார் கைது !!
பாதுகாப்பு பணிக்குசென்ற பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை.. தாசில்தார் கைது !!

பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த துணை தாசில்தாரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்துறை பிரிவில், துணை தாசில்தாராக பாபு (35) என்பவர் உள்ளார். இவர் தலைமையில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் பணியையொட்டி, ஊட்டி - மஞ்சூர் சாலையில் அதிகரட்டி சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இந்த குழுவில் பெண் காவலர் ஒருவரும் பணியில் இருந்தார்.

இந்த நிலையில், பாதுகாப்பு பணிக்கு வந்த அந்த பெண் போலீசை, துணை தாசில்தார் பாபு பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் போலீசார் அங்கிருந்து சென்றார். மேலும் பாலியல் தொல்லை தொடர்பாக ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் போலீஸ் புகார் அளித்தார்.
இது குறித்து தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், பெண் போலீசிடம், துணை தாசில்தார் பாபு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததை உறுதிப்படுத்தினர். இதனையடுத்து துணை தாசில்தார் பாபு மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிக்கு சென்ற பெண் போலீசை, துணை தாசில்தார் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

