மகளிர் தின நிகழ்ச்சியில் விபரீதம்... ஆய்வாளர் திட்டியதால் பெண் காவலர் தற்கொலை முயற்சி..!
மகளிர் தின கொண்டாட்டத்தில் விபரீதம்... ஆய்வாளர் திட்டியதால் பெண் காவலர் தற்கொலை முயற்சி..!

பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தகாத வார்த்தையில் திட்டியதால், பெண் காவலர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில், மரக்கன்றுகளும் நடப்பட்டன. அப்போது உதவி காவல் ஆய்வாளர் சகுந்தலா, தன்னுடன் பணி புரியும் இசக்கி மீனா என்ற பெண் காவலரை தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த இசக்கி மீனா காவல் நிலைய மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட சக காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர். கிழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவர் ஆபத்தான நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்வு தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
newstm.in