பெண்களுக்கு இலவசம்! அசத்தும் கடை உரிமையாளர்!
இந்த இலவச தேநீர் குறித்து தனது கடைக்கு அருகில் விளம்பர பலகை ஒன்றையும் முன்னதாக வைத்திருந்தார். இன்று மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை பெண்களுக்கு இலவச தேநீர் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து கூறும் போது, எனது கடைக்கு தினந்தோறும் பெண் வாடிக்கையாளர்கள் நிறைய பேர் வருகிறார்கள். நம்ம நாட்டோட பிரதமரே தேநீர் விற்றவர் தான். தமிழகத்தின்

உலக மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு மும்பையில் தேநீர் கடை உரிமையாளர் ஒருவர், இன்று தனது கடைக்கு வரும் பெண்கள் அனைவருக்கும் இலவசமாக தேநீர் வழங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த இலவச தேநீர் குறித்து தனது கடைக்கு அருகில் விளம்பர பலகை ஒன்றையும் முன்னதாக வைத்திருந்தார். இன்று மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை பெண்களுக்கு இலவச தேநீர் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து கூறும் போது, எனது கடைக்கு தினந்தோறும் பெண் வாடிக்கையாளர்கள் நிறைய பேர் வருகிறார்கள். நம்ம நாட்டோட பிரதமரே தேநீர் விற்றவர் தான். தமிழகத்தின் முன்னாள் முதல்வருக்கும் கூட தேநீர் கடை சொந்தமாக இருக்கிறது என்று கேள்விபட்டிருக்கிறேன். அதனால் எந்த வேலையும் சிறியதாகவோ பெரியதாகவோ இல்லை. என்னுடைய கடைக்கு வரும் பெண்களை மகிழ்வித்து, அவர்களுக்கு மரியாதை செய்ய நினைத்தேன். அதனால் இப்படி ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறேன் என்றார்.
newstm.in

