Theme Check

நகராட்சி ஆணையர் மீது மை ஊற்றிய பெண்கள்.. காரணம் இதுதான்?

நகராட்சி ஆணையர் மீது மை ஊற்றிய பெண்கள்.. காரணம் இதுதான்?

நகராட்சி ஆணையர் மீது மை ஊற்றிய பெண்கள்.. காரணம் இதுதான்?
X

நகராட்சி ஆணையர் மீது பெண்கள் மை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அமராவதி நகரில் ராஜாபேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சுரங்கப்பாதையில் பயணிக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும், ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறும் அப்பகுதி மக்கள், கசிவை உடனே சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், நகராட்சி நிர்வாகம் மக்களின் கோரிக்கைக்குச் செவி கொடுக்காமல் நாட்களைக் கடத்தி வந்துள்ளது. நீண்ட நாள்களாக சீரமைப்புப் பணிகள் நடக்காத நிலையில், நகராட்சி ஆணையர் பிரவீன் அஷ்டிகார் அப்பகுதியில் சாலை ஆய்வுப் பணிக்காக சென்றிருந்தார்.

andra

அப்போது, யுவ ஸ்வாபிமான் கட்சியைச் சேர்ந்த பெண்கள், அவர் மீது மையை ஊற்றி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். வெள்ளைச்சட்டை அணிந்து வந்திருந்த ஆணையர் மீது மையை ஊற்ற விடாமல் காவல் துறையினர் தடுத்தபோதும், அவர்களது முயற்சிக்கு பலனின்றி போனது. இதையடுத்து நகராட்சி ஆணையரை காவல்துறையினர் அங்கிருந்து பத்திராக அழைத்துச்சென்றனர்.

நகராட்சி அதிகாரி மீது கருப்பு மை வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல முறை முறையிட்டும், மனு அளித்தும் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட கசிவை சரிசெய்ய நடவடிக்கை கூட எடுக்கவில்லை என்று அப்போது பெண்கள் குற்றம்சாட்டினார்.

newstm.in

Next Story
Share it