Theme Check

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்.. இந்தியா அபார வெற்றி..!

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்.. இந்தியா அபார வெற்றி..!

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்.. இந்தியா அபார வெற்றி..!
X

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் 155 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

12-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடந்து வருகிறது. ஹாமில்டனில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, ஸ்டெபானி டெய்லர் தலைமையிலான வெஸ்ட் இண்டீசுடன் விளையாடி வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அபாரமாக ஆடி சதமடித்தார். அவர் 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவருக்கு பக்கபலமாக நின்ற ஹர்மன்பிரீத் கவுர் சிறப்பாக விளையாடி 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது, உலகக் கோப்பை தொடரில் அவருடைய 4-வது சதமாகும்.

அவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து 184 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர். இதனால் இந்திய அணி 300 ரன்களை கடந்து சிறப்பான ஸ்கோரை எட்டியது. இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் குவித்தது.

பின்னர் 318 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 40.3 ஓவரில் 162 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீராங்கனைகள் டியான்ட்ரா டாட்டின் 62 ரன்களும், ஹெய்லி மேத்யூஸ் 43 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணியில் ஸ்நேஹ் ராணா 3 விக்கெட்டுகளையும், மேக்னா சிங் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கோஸ்வாமி, ராஜேஸ்வரி கெய்க்வாட் மற்றும் பூஜா வஸ்திராகர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இந்த போட்டியின் சிறந்த வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Next Story
Share it