Theme Check

வாரத்தில் 4 நாள் வேலை… சம்பளம் குறைப்பு! வருகிறது புதிய சட்டம்!!

வாரத்தில் 4 நாள் வேலை… சம்பளம் குறைப்பு! வருகிறது புதிய சட்டம்!!

வாரத்தில் 4 நாள் வேலை… சம்பளம் குறைப்பு! வருகிறது புதிய சட்டம்!!
X

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் குறியீடுகள் அடுத்த நிதியாண்டில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம், சமூகப் பாதுகாப்பு, தொழில்துறை உறவுகள், தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வேலை நிலைமைகள் தொடர்பான தொழிலாளர் குறியீடுகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த குறியீடுகளை கடந்த ஏப்ரல் மாதமே அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.

ஆனால், பல்வேறு மாநிலங்கள் புதிய தொழிலாளர் குறியீடுகள் தொடர்பான விதிகளை இறுதி செய்யாமல் இருந்ததால், அந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், புதிய தொழிலாளர் குறியீடுகள் தொடர்பான வரைவு விதிகளை பெரும்பாலான மாநிலங்கள் இறுதி செய்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

North_Block_Delhi

அதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள நான்கு தொழிலாளர் குறியீடுகள் அடுத்த நிதியாண்டில் அதாவது 2022-23ஆம் நிதியாண்டில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தொழிலாளர் குறியீடுகள் அமலுக்கு வந்த பிறகு, ஊழியர்களின் டேக் ஹோம் சம்பளம் மற்றும் பிற உரிமைகளையும் நேரடியாகப் பாதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. நிறுவனங்கள், ஊழியர்களின் பி.எஃப்-க்கு அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும். இதன் காரணமாகவே ஊழியர்களின் டேக் ஹோம் சம்பளம் குறையும் என கூறப்படுகிறது.

North_Block_Delhi

அத்துடன், ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றின் கணக்கீட்டிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என தெரிகிறது.மேலும், தற்போது உள்ள ஐந்து நாள் வேலை திட்டம் முடிவுக்கும் வரும்.

நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் என்ற கணக்கில் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை செய்தால் போதும் என்று ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Next Story
Share it