Theme Check

அனைவருக்கும் வேலை.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

அனைவருக்கும் வேலை.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

அனைவருக்கும் வேலை.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
X

“நீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னர் மக்கள் நலப் பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்கப்படும்” என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், “திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படுமா..?” எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “மக்கள் நலப் பணியாளர்களை நியமனம் செய்தது திமுக ஆட்சி. அவர்களை வீட்டுக்கு அனுப்பியது அதிமுக ஆட்சி.

மக்கள் நலப் பணியாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். அந்த வழக்கின் தீர்ப்புக்கு பின்னர், மக்கள் நலப்பணியாளர்கள் அனைவருக்கும் வேலை வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

நீதிமன்ற தீர்ப்பு வந்த பின்னர் மக்கள் நலப் பணியாளர்கள் அனைவருக்கும் பணி வழங்கப்படும் என முதல்வர் கூறியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த விவகாரத்தில் முதல்வரின் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story
Share it