Theme Check

ஒர்க் ஃப்ரம் ஹோம் கொடூரம்.. உயிருக்கு போராடும் ஐ.டி நிறுவன பெண் ஊழியர் !!

ஒர்க் ஃப்ரம் ஹோம் கொடூரம்.. உயிருக்கு போராடும் ஐ.டி நிறுவன பெண் ஊழியர் !!

ஒர்க் ஃப்ரம் ஹோம் கொடூரம்.. உயிருக்கு போராடும் ஐ.டி நிறுவன பெண் ஊழியர் !!
X

ஐ.டி. நிறுவன பெண் ஊழியர் ஒருவர் சார்ஜ் போட்டபடியே லேப்டாப் மூலம் வேலை செய்துகொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து அவர் படுகாயம் அடைந்தார்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள மேக்கவாரி கிராமத்தை சேர்ந்தவர் சுமலதா. பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கொரோனா காலத்தை தொடர்ந்து தற்போதும் ஒர்க் ப்ரம் ஹோம் அடிப்படையில் வீட்டிலிருந்தபடியே வேலை செய்து வருகிறார்.

laptop

இந்த நிலையில் காலையில் தன்னுடைய லேப்டாப்பை சார்ஜ் போட்ட நிலையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று லேப்டாப் சார்ஜ் 10 சதவீதத்திற்கும் குறைந்து அதிலிருந்து ஹை வோல்டேஜ் மின்சாரம் சுமலதா மீது பாய்ந்தது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அவர் காயமடைந்து தவித்தார். அந்நேரம் கதவை அவர் தாழ் போட்டிருந்ததால் அவரால் உடனடியாக வெளியேற முடியவில்லை.
laptop
ஆனால், அவரது அறையில் சத்தம்கேட்டு சென்ற உறவினர்கள் அவரை மீட்டனர். சுமார் 40 சதவீதம் அளவிற்கு தீக்காயமடைந்த சுமலதாவை பெற்றோர் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுமலதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it