Theme Check

'ஒர்க் பிரம் ஹோம்' தான் வேண்டும்.. ஐடி ஊழியர்கள் பிடிவாதம் !!

'ஒர்க் பிரம் ஹோம்' தான் வேண்டும்.. ஐடி ஊழியர்கள் பிடிவாதம் !!

ஒர்க் பிரம் ஹோம் தான் வேண்டும்.. ஐடி ஊழியர்கள் பிடிவாதம் !!
X

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொரோனா தொற்று கல்வி முறையையும், ஊழியர்களின் பணி முறையையும் மாற்றிவிட்டது என்றே கூறலாம். பெரும்பாலான நிறுவனங்கள் அதன்பின்னர் தான் ஒர்க் பிரம் ஹோம் திட்டத்தை கொண்டுவந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்தாலும், ஐடி நிறுவன பணியாளர்கள் ஒர்க் பிரம் ஹோம் முறையையே அதிகம் விரும்புகின்றனர் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

இது குறித்து சி.ஐ.ஈ.எல் நிறுவனம் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. 9 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக வேலை செய்யும், முன்னணியில் உள்ள முதல் 10 ஐ.டி.நிறுவனங்கள் உட்பட 40 நிறுவனங்களில் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், கிட்டத்தட்ட 50 சதவீத ஐடி நிறுவனங்கள் கடுமையாக முயற்சித்து ஊழியர்களை மீண்டும் அலுவலகத்தில் வந்து பணிபுரிய அழைத்து பார்த்தும் பயனில்லை. கணக்கெடுக்கப்பட்ட நிறுவனங்களில் 30 சதவீத நிறுவனங்கள் இன்னும் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கின்றன.

usa

மீதமுள்ள நிறுவனங்கள் அலுவலகத்தில் இருந்து பணியைத் தொடங்கியுள்ளன அல்லது ஊழியர்களை அலுவலக இடங்களுக்கு விரைவில் அழைக்க திட்டமிட்டுள்ளன. ஆனால் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் முறையிலிருந்து மாறுவதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

40 சதவீத நிறுவனங்கள் ஹைப்ரிட் முறையில் இயங்கி, ஊழியர்களை வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்யச் சொல்கிறது. ஹைபிரிட் சுழற்சி முறையில் அலுவலகத்திற்கு வரச் சொல்லியும், இந்த நிறுவனங்களில் 25 சதவீத தொழிலாளர்கள் மட்டுமே அலுவலகத்திற்குத் திரும்பியுள்ளனர்.

usa

மறுபுறம் சிறிய ஐடி நிறுவனங்களில் 30 சதவீத ஊழியர்கள் முழுநேர அடிப்படையில் அலுவலகத்திற்குத் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆக மொத்தம், தொழிலாளர்களை மீண்டும் அலுவலகங்களுக்கு அழைப்பதில் முதலாளிகள் சிரமப்படுகின்றனர் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் முக்கால்வாசி பேர் இன்னும் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள். ஊழியர்களை அலுவலகத்திற்குத் திரும்பக் கட்டளையிடுவது ஐ.டி.துறையில் பெரும்பாலானோர் ராஜினாமா செய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது.


newstm.in

Next Story
Share it