2022 டிசம்பர் வரை வொர்க் ஃப்ரம் ஹோம்!
2022 டிசம்பர் வரை வொர்க் ஃப்ரம் ஹோம்!

கடந்த இரு வருடங்களாக உலகத்தையே புரட்டி போட்டு கொண்டிருக்கும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு, ஐ.டி. நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்த படியே பணி செய்ய அறிவுறுத்தியிருந்தது. தற்போது, அடுத்த வருடம் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில், தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க வேண்டாம். வீட்டிலிருந்தே பணி செய்ய பணிக்குமாறு கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஐடி நிறுவனங்களின் தேசிய சங்கத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘சென்ட்ரல் சில்க் போர்டு முதல் கேஆர்புரம் வரையிலான அவுட்டர் ரிங் சாலையில், மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளை பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் இன்னும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க உள்ளது. இச்சாலையில் தான், பல தொழில்நுட்ப பூங்காக்கள், ஐடி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதனால் நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க கோவிட் காலத்தைப் போல், 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை, வீட்டிலிருந்து பணிபுரியும் நடைமுறையை ஐடி நிறுவனங்கள் நீட்டிக்க வேண்டும்’ எனத் குறிப்பிட்டுள்ளது.

