ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..!
ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..!

தென்கிழக்கு மத்திய ரயில்வே (SECR), ஸ்போர்ட்ஸ் கோட்டாவின் கீழ் பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பதாரர்களை பணியமர்த்துவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இப்பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் SECR இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான secr.indianrailways.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் இப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மார்ச் 5, 2022 என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
விண்ணப்பதாரர் ஒன்றுக்கும் மேற்பட்ட விளையாட்டுத் துறைகள் அல்லது நிகழ்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், அதற்காகத் தனித்தனியாக தேர்வுக் கட்டணத்தை செலுத்தி தனித்தனியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
லெவல் 2 மற்றும் லெவல் 3 பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விளையாட்டு சாதனைகளுடன் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
லெவல் 4 மற்றும் லெவல் 5 பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விளையாட்டு சாதனைகளுடன், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
தேர்வுமுறை:
விளையாட்டுத் திறன், உடல் தகுதி மற்றும் பயிற்சியாளரின் கண்காணிப்பு, நெறிமுறைகளின்படி அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சாதனைகளின் மதிப்பீடு மற்றும் கல்வித் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நியமனம் செய்யப்பட்ட தேர்வுக் குழுவால் நடத்தப்படும் மற்றும் இறுதி செய்யப்படும் விளையாட்டு சோதனைகள் மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பில் செயல்திறன் அடிப்படையில் தேர்வு இருக்கும்.
தேர்வு கட்டணம்:
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைத்து பிரிவினரும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். SC/ST பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 250 செலுத்தினால் போதுமானது.
எப்படி விண்ணப்பிப்பது?
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தென்கிழக்கு மத்திய ரயில்வேயின் (SECR) அதிகாரப்பூர்வ இணையதளமான secr.indianrailways.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தகுதி வரம்பு, வயது வரம்பு மற்றும் ஊதிய அளவு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

