இனி வாரத்திற்கு 4.5 நாள் வேலை செய்தால் போதும்... புதிய விதி !!

இனி வாரத்திற்கு 4.5 நாள் வேலை செய்தால் போதும்... புதிய விதி !!

இனி வாரத்திற்கு 4.5 நாள் வேலை செய்தால் போதும்... புதிய விதி !!
X

உலகின் பெரும்பாலான நாடுகளில் வாரத்தில் 6 நாட்கள் அல்லது 5 நாட்களுடன் தினசரி 8 மணி நேரம் பணி என்ற நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இந்தியாவிலும் அப்படி தான். ஆனால், உலகிலேயே முதன்முறையாக வாரத்திற்கு 4.5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அறிவித்துள்ளது ஐக்கிய அரபு அமீரக அரசு.

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை நாட்கள் பற்றிய புதிய அறிவிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன்படி, உலகில் முதன்முறையாக வாரத்திற்கு 4.5 நாட்கள் வேலை நாட்களாக அந்த நாட்டில் இருக்கும்.

worker

முஸ்லிம் நாடுகளில் இறைவணக்க நாளாக வெள்ளி கிழமை உள்ளது. இதனை முன்னிட்டு, வெள்ளிக் கிழமைகளில் மதியத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் வார இறுதி நாட்கள் தொடங்குகின்றன. அத்துடன் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் என இரண்டரை நாட்கள் விடுமுறைகளாக அமைகிறது. அந்நாட்டின் பொருளாதார போட்டித்திறனை நவீனப்படுத்துவதில் செயல்திறனை அதிகரிப்பதுடன், பணி மற்றும் வாழ்க்கை சூழல் சமநிலைப்படுத்துதல் மற்றும் சமூக நலன் ஆகியவற்றை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக ஐக்கிய அரபு அமீரக அரசின் இந்த வார இறுதிநாள் நீட்டிப்பு அமைந்துள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it