Theme Check

கடைசி நேர விசாக்களை நம்பி வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் - போலீஸ் எச்சரிக்கை..!!

கடைசி நேர விசாக்களை நம்பி வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் - போலீஸ் எச்சரிக்கை..!!

கடைசி நேர விசாக்களை நம்பி வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் - போலீஸ் எச்சரிக்கை..!!
X

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் தர்மா. இவர், “வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சிலர் என்னை ஏமாற்றி விட்டனர்” என்று போலீசில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில், படித்த பட்டதாரி பொறியாளர்களுக்கு வெளிநாடுகளில் தினக்கூலி வேலை வாங்கிக் கொடுத்து மோசடி செய்தது தெரியவந்தது.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியான ரவிக்குமார் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த மற்றொரு குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறும் நபர்களிடம் பணத்தைக் கொடுக்க வேண்டாம்.

மேலும், தரகர்கள் கடைசி நேரத்தில் விமான நிலையத்தில் வைத்து தரும் விசாக்களை நம்பி வெளிநாடுகளில் வேலைக்குச் செல்ல வேண்டாம்.

பயணத்திற்கு முன்பே விசாவை பெற்று, சம்பந்தப்பட்ட குடிபெயர்வோர் அலுவலகத்தை அணுகி அதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

முறையாக விசாரணை செய்யாமல் முகவர்களிடம் பணத்தையோ, பாஸ்போர்ட்டையோ கொடுக்க வேண்டாம்” என சங்கர் ஜிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story
Share it