உலக கோப்பை வில்வித்தை போட்டி.. தீபிகா குமாரி, அபிஷேக் வர்மா தங்கம் !!
உலக கோப்பை வில்வித்தை போட்டி.. தீபிகா குமாரி, அபிஷேக் வர்மா தங்கம் !!

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அதனுதாஸ், வீராங்கனை தீபிகா குமாரி ஜோடி தங்கம் வென்றது. கலப்பு இரட்டையர் அணிப் போட்டியில் நெதர்லாந்து ஜோடியை இந்தியாவின் அதனுதாஸ், தீபிகா குமாரி ஜோடி வீழ்த்தியது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலக கோப்பை வில்வித்தை ‘ஸ்டேஜ்–3’ போட்டி நடைபெற்று வருகிறது. இதில், கலப்பு இரட்டையர் ‘ரிகர்வ்’ பிரிவில் இந்தியாவின் சார்பில் தீபிகா குமாரி- அட்டானு தாஸ் ஜோடி களம்கண்டது. இந்திய அணி இறுதிப்போட்டியில் நெதர்லாந்து ஜோடியை எதிர்கொண்டது. போட்டி தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் ஆக்ரோஷமாக களம்கண்டனர்.

-இறுதியில் இதில் தீபிகா குமாரி- அட்டானு தாஸ் 5-3 என வெற்றி பெற்று இந்தியாவுக்கு தங்க பதக்கம் வென்றனர். மேலும், பெண்களுக்கான அணியில் தீபிகா குமாரி, அங்கிதா பகத், கோமலிகா பரி ஆகியோர் ரிகர்வ் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றனர். மெக்சிகோ அணியை 5-1 எனத் தோற்கடித்தது.

ஏற்கனவே, ஆண்களுக்கான தனிநபர் ‘காம்பவுண்டு’ பிரிவில் அபிஷேக் வர்மா தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.
newstm.in

